புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று மக்களவை இந்திய நேரப்படி நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிருப்திக் குரல் எழுப்பினார். அதையடுத்து, மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து மாநிலங்களவையும் இந்திய நேரப்படி நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

