குடிசைகளை அகற்றக்கூடாது; குரல் எழுப்பிய தாராவி குடியிருப்பாளர்கள்

குடிசைகளை அகற்றக்கூடாது; குரல் எழுப்பிய தாராவி குடியிருப்பாளர்கள்

படம்: ஏஎஃப்பி

11 Aug 2023 - 6:16 pm

1 mins read

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் உள்ள தாராவி குடிசைப் பகுதியை அகற்றி அப்பகுதியை மறுசீரமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கொடிகளை ஏந்திக்கொண்டு தாராவி பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிகாரிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.

தாராவி குடிசைப் பகுதியில் தமிழர்கள் பலர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்