திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகுப் போட்டி நடக்கும்.
அதன்படி 69வது நேரு கோப்பை படகுப்போட்டி சனிக்கிழமை நடந்தது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் அதைக் கண்டனர். ஒன்பது பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. 19 சுண்டன் வள்ளங்கள் உள்பட 72 வள்ளங்கள் போட்டியில் பங்கேற்றன.
வீரர்கள் துடுப்பு போட படகுகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
இதனால் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வேகமாக துடுப்புகளைச் செலுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற படகுகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.