புதுடெல்லி: ஹரியானாவின் நூ மாவட்டத்தில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த மாதம் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை நடந்தது.
நூ மாவட்டத்தில் யாத்திரை நடந்தபோது, ஒரு கும்பல், யாத்திரையில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘சர்வ இந்து சமாஜ்’ என்ற பெயரில் மகாபஞ்சாயத்து கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரையை அரசு அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் வரும் 28ஆம் தேதி முதல் தொடர முடிவு செய்யப்பட்டது.

