புதுடெல்லி: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மகளிர் ஆணையத்தின் சார்பில் பெண்கள் உதவி தொலைபேசி எண் சேவை தொடங்கப்பட்டது. 181 என்ற இலவச உதவித் தொலைபேசி எண் அழைப்பில் பெண்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.
இந்த 7 ஆண்டுகளில் 40 லட்சம் உதவி தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. 2022 ஜூலை முதல் 2023 ஜூலை வரை 6.30 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 6.30 லட்சம் அழைப்புகள் வருகின்றன என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவால் தெரிவித்தார்.