சிம்லா: இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் சிவன் கோயில் ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஐவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனமழை காரணமாக கோயில் சுவர்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர் மலையில் இந்த சிவன் கோயில் உள்ளது.
சம்பவத்தின்போது கோயிலில் 25 முதல் 30 பேர் வரை இருந்துள்ளனர். மாநிலம் முழுவரம் 24 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் பல இடங்களில் நிச்சரிவுகள் ஏற்பட்டன.

