செம்மரக் கடத்தல்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர் கைது

செம்மரக் கடத்தல்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர் கைது

1 mins read
ab2d400b-b30b-4fad-957b-44a1b12bf07e
ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி க் கடத்தும் பணியில் ஈடுபட்டதாக 48 பேரை ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.

இவர்கள் மொத்தம் 51 செம்மரங்களைக் கடத்த முயன்றுள்ளதாகத் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 51 செம்மரக்கட்டைகள், இரண்டு கார்கள் ஒரு ஆட்டோ ஆறு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் காவல்துறை செய்துள்ளது. கைதானவர்கள்ர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

செம்மரக் கடத்தல் அனைத்துலக அளவிலான ஒரு தொழிலாக உள்ளது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அனைத்துலக அளவிலான கடத்தல்காரர்களுக்கும் ஈடுபட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக ஆந்திர மாநில அரசு கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து கடத்தல் நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்