கர்நாடகா: தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர்

கர்நாடகா: தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர்

1 mins read
b2e2f2ab-a261-4ffd-96eb-c08749c16ba4
தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகா முடிவு செய்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.  வறட்சி ஏற்பட்டுள்ள காலத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை வேண்டாம். போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும். 

மேக்கேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதல் தந்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாகவே தண்ணீர் திறக்க முடியும். கடந்த ஆண்டு 400 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் சென்றது. அணை இருந்தால் தேக்கி வைத்திருக்கலாம். தமிழகத்திற்கு இப்போது 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  எனவே, தமிழக நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள். அதன் மூலம் இவ்வாறான காலக்கட்டங்களில் தண்ணீர் திறந்து விட முடியும். இரு மாநிலங்களும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழக விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. தமிழகமும் கர்நாடக விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்த வேண்டாம். கர்நாடகா எந்த சண்டையிலும் ஈடுபட விரும்பவில்லை, இரு மாநிலத்தவரும் சகோதரர்கள் போன்றவர்கள் என்றும் அவர் கூறினார்

குறிப்புச் சொற்கள்