ஸ்ரீநகர்: பல ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீர் மக்கள் முதன்முதலாக எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
1989ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து காஷ்மீரில் சுதந்திர தினம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வந்தது.
ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் ஜம்மு-காஷ்மீரின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஆர்வமுடன் பேரளவில் பங்கேற்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக பக்ஷி மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாடங்கள் நடைபெற்றது. பொதுவாக சுதந்திர தின நிகழ்ச்சிகள் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் தலைமையில் நடைபெறும். அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்த 2019ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு, லடாக் ஆகிய ஒன்றிய ஆட்சிப்பகுதிகளாக பிரிக்கப்பட்ட பிறகு, நிர்வாக அதிகாரியாகச் செயல்படும் துணை நிலை ஆளுநர் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

