புதுடில்லி: இந்தியாவெங்கும் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த, பிரதமரின் மின் பேருந்து சேவா திட்டத்தின் கீழ், மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.57,613 கோடியில் ரூ.20 ஆயிரம் கோடி மத்திய அரசு தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமா 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தியாவின்169 நகரங்களில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நகரத்திற்கு 100 பேருந்துகள் வீதம் இயக்கப்படும்.
பத்து ஆண்டுகள் இந்த பேருந்து சேவை இருக்கும். மொத்தமுள்ள ரூ. 57,613 கோடியில் ரூ. 20,000 மத்திய அரசு வழங்குகிறது. மின்சாரப் பேருந்து திட்டத்தால் 45,000 பேர் முதல் 55,000 பேர் வரை வேலை வாய்ப்புகளை பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த ரூ. 14,903 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, எளிதாக தொழில் தொடங்க குறைந்த வட்டிக்கு ரூ. 1 லட்சம் வரையில் கடன் வழங்கும் விஸ்வகர்மா திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.

