பீகாரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

பீகாரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

1 mins read
a54dfe69-0f93-4438-b037-0087dcab7a92
பத்திரிகையாளர் விமல்குமார். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் இருந்து வெளிவரும் ‘தைனிக் ஜாக்ரன்’ என்ற பத்திரிகையில் விமல்குமார், 41, என்பவர் வேலை செய்துவந்தார்.

ராணி கஞ்ச் என்னும் பகுதியில் தமது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த அவரது வீட்டிற்கு வெள்ளிக்ழிமை அதிகாலை பைக்கில் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் விமல்குமாரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வெளியே வந்ததும் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த விமல்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் கூடினர். அவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விமல்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு விமல்குமாரின் அண்ணன் கொலை செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்