நாய்கள் குரைத்ததால் இருவர் சுட்டுக்கொலை

1 mins read
22df0923-ab88-41b9-a533-d67d2f1f290c
மொட்டைமாடியில் இருந்து சுட்டதில் மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். - படம்: இந்திய ஊடகம்

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் வசிக்கும் ராஜ்பால் ரஜாவத் என்பவர் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், தம்முடைய நாயுடன் கிருஷ்ணா பாக் காலனி என்னும் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

அவரது பக்கத்து வீட்டுக்காரரான விமல் அச்சாலா, 35, என்பவரும் தமது நாயுடன் சென்றார். இரண்டு நாய்களும் ஒன்றையொன்று பார்த்து கடுமையாகக் குரைத்தன. அது தொடர்பாக ராஜ்பாலுக்கும் விமலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ராஜ்பால், வேகமாகத் தமது வீட்டுக்குள் ஓடினார். சிறிது நேரத்தில் வீட்டு மொட்டைமாடியில் இருந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி இருமுறை சுட்டார். பின்னர் சாலையில் நடந்து சென்றவர்களை நோக்கிச் சுட்டார்.

அதில் விமலும் மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான ராகுல் வர்மா, 28, என்பவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். ராஜ்பால் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அந்த வட்டாரத்தில் பெரும் பீதியைக் கிளப்பியது.

குறிப்புச் சொற்கள்