தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவை நெருங்கும் சந்திரயான்-3

1 mins read
dabcefbe-4fba-43cf-9ebd-828a436fbc7e
சந்திரயான்-3 எடுத்த நிலவின் படம். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பெங்களூரு: தனது சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் படங்களை இந்தியாவின் விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படங்கள் எடுக்கப்பட்டன.

நிலவின் தென்துருவத்துக்கு இதுவரை யாரும் தரையிறங்கியதில்லை. அங்கு பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதாக நம்பப்படுகிறது.

முதலில் அப்பகுதியைச் சென்றடைய ரஷ்யாவும் முயற்சி செய்து வருகிறது.

வியாழக்கிழமை சந்திரயான்-3 நிலவைப் படமெடுத்தது. நிலவில் தரையிறங்கவிருக்கும் விக்ரம் எனப் பெயரிடப்பட்ட கலன் வெளிவந்த உடனே படங்கள் எடுக்கப்பட்டன.

சந்திரயான்-3 விண்கலத்தைக் கொண்ட உந்துகணையை இந்தியாவின் விண்வெளி அமைப்பு ஜூலை மாதம் 14ஆம் தேதி அனுப்பியது.

இந்தியாவின் ஆக முக்கியமான விண்வெளித் தளம் அந்நாட்டின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து சந்திரயான்-3ஐக் கொண்ட உந்துகணை பாய்ச்சப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி விக்ரம் கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்