புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் 225 பேரில் 27 பேர் கோடீஸ்வரர்கள். மொத்தமுள்ள 85 பாஜக எம்.பி.க்களில் 6 பேர் கோடீஸ்வரர்கள். 30 காங்கிரஸ் எம்.பி.க்களில் 4 பேர் கோடீஸ்வரர்கள். 9 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களில் 4 பேர் கோடீஸ்வரர்கள். ஆந்திரம்தான், அதிகபட்சமாக ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகளை வைத்திருக்கும் அதிகமான எம்.பி.க்களை கொண்டிருக்கும் மாநிலமாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தெலுங்கானா, மகாராஷ்டிரம் உள்ளன.
மாநிலங்களவை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.80.93 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) - தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மொத்தமுள்ள 233 மாநிலங்களவை உறுப்பினர்களில் 225 எம்.பி.க்களின் குற்றப் பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.