புதுடில்லி: ராகுல் காந்தி லடாக்கில் மோட்டார்சைக்கிளில் செல்லும் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
காஷ்மீர் இரண்டு ஒன்றிய ஆட்சிப்பகுதிகளாக பிரிக்கப்பட்ட பிறகு லடாக் பகுதிக்கு முதன்முறையாக சென்றுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல். அங்கு அவர் பாங்கோங் ஏரிப்பகுதி வரை மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.
அந்தப் படங்களை இணையத்தில் வெளியிட்ட ராகுல், “பாங்கோங் ஏரி உலகின் மிகவும் அழகான இடம் என்று என் தந்தையார் அடிக்கடி கூறுவார்,” எனக் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பாங்கோங் ஏரியில் ராகுல் வழிபாடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது. நேற்று லடாக்கில் இளைஞர் காங்கிரசாருடன் கலந்துரையாடிய ராகுல், அப்பகுதியில் நடந்த காற்பந்து போட்டியிலும் கலந்துகொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது ஆள்களை நியமித்துள்ளது. அனைத்தையும் நிர்வகித்து வருகிறது.
“ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள்தான் உண்மையில் அமைச்சுகளை நடத்துவதுடன், அனைத்து ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

