பாட்னா: பீகாரில் பத்திரிக்கையாளர் விமல் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரில், இருவர் விமல் குமாரின் சகோதரரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு சார்பஞ்சாக இருந்த விமல் குமாரின் தம்பி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் விமல் குமார் முக்கியச் சாட்சியாக இருந்தார்.
பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

