கோலாகலமாகத் தொடங்கிய ஓணம் பண்டிகை

1 mins read
704f68f8-9075-4f6b-802a-32f630fc1ad8
கோப்புப்படம் - பிக்சாபே

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை விமர்சையாகத் தொடங்கியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பண்டிகை அடுத்த 10 நாள்களுக்கு கொண்டாடப்படும். 

பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்தன. 

மகாபலி ராஜாவை பூமிக்கு வரவேற்கும் விதமாக பூக்களால் வீடுகளில் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

ஆகஸ்ட் 29ஆம் தேதி ஓணம் பண்டிகை கடைசி நாள் கொண்டாடப்பட உள்ளது. 

ஓணம் பண்டிகை காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் பூக்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்