பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ஒரு ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
அது இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான விமானம் என்று தெரிவிக்கப்பட்டது.
பயிற்சியின் போது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்ததைக் காண அப்பகுதி கிராம மக்கள் குவிந்தனர்.
சிதைந்த பாகங்களை யாரும் எடுக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.