தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பனி லிங்கம் உருகிய பிறகும் அமர்நாத் வரும் பக்தர்கள்

1 mins read
926a68be-87da-4a4f-a6a6-b0eb7d1682e9
படம்; - இந்திய ஊடகம்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது.

இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

இந்த ஆண்டு 62 நாள்களுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. வரும் 31ஆம் தேதியுடன் யாத்திரை முடிவடைகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்ததால் யாத்திரை முடிவதற்கு முன்பே பனி லிங்கம் முற்றிலும் உருகிவிட்டது. எனினும் குகைக் கோயிலுக்கு பக்தர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 17 வரை இக்கோயிலுக்கு 4,38,733 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்