திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்திற்கான வழிபாட்டு சீட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்ற சேவைகளுக்கான சீட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பக்தர்கள் திங்கட்கிழமை காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி தங்கள் அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை போன்றவற்றுக்கான சீட்டுகள் வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள், உடற்குறையுள்ளோருக்கான வழிபாட்டுச் சீட்டுகள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
24ஆம் தேதி காலை 10 மணிக்கு ரூ. 300 சிறப்பு விரைவு வழிபாட்டுச் சீட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

