லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் இரண்டு கைத்துப்பாக்கிள், 30 வெடிகுண்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விடுதியில் இரண்டு சிறுவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
கைகலப்பு தொடர்பாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த விடுதிக்குச் சென்றனர்.
காவல்துறையினர் வருவதைக் கண்டதும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
அதன் பின் அதிகாரிகள் சிறுவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனையை மேற்கொண்டனர்.
சோதனையில் அறையிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 30 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்களைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அறையில் கைத்துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் எப்படி வந்தது? சிறுவர்களுக்கும் அந்த ஆயுதங்களுக்கும் என்ன தொடர்பு? இதில் ஏதும் சதி திட்டம் அடங்கியுள்ளதா? என்று பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்தது.
சிறுவர்கள் இருந்த அறையில் காவல்துறையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்திருப்பது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

