தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம்: இஸ்ரோ

2 mins read
d8fd5bc3-85ee-44df-a4b5-912ae042bd42
படம்: - இஸ்ரோ

சென்னை: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது

நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. 

விக்ரம் இறங்குகலம் (லேண்டர்), விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. 

பின்னர் கடந்த 18ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை இன்று அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது.

தற்போது நிலவிலிருந்து குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் அதிகபட்சம் 134 கிலோ மீட்டர் என்ற தொலைவில் லேண்டர் பயணித்து வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை எதிர்நோக்கி இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் சந்திரயான்-3 விண்கலத்தை பல மடங்கு குறைந்த விலையில் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.