ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 2 சுற்றுவட்டப்பாதை மற்றும் சந்திரயான் 3ன் இறங்குக்களம் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம், சந்திரயான் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 2 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாள்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 வெற்றிகரமாக நுழைந்தது.
எனினும் திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அந்தக் கருவியைத் தொடர்புகொள்ள இஸ்ரோ சார்பில் பலமுறை முயற்சி செய்தது. எனினும் அவை தோல்வியில் முடிந்தன.
இதற்கிடையே, சந்திராயன் 2ன் சுற்றுவட்டப்பாதையுடன் சந்திராயன் 3ன் இறங்குக்களம் இணைந்திருப்பதால் சந்திரனில் தனது விண்கலம் தரையிரங்க இந்தியாவின் இஸ்ரீ அமைப்பு கொண்டுள்ள இலக்கு நிறைவேறும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆய்வுசெய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவின் புதிய படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அவற்றை வெளியிட்டுள்ளது.
சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் இறங்குகலம் (லேண்டர்) இம்மாதம் 23ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இம்மாதம் 19ஆம் தேதி விக்ரம் இறங்குகலம் எடுத்த சில புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.
தரையிறங்க ஏதுவான இடத்தைக் கண்டறியும் நோக்கில், விக்ரம் இறங்குகலம் நிலவின் புதிய படங்களை எடுத்து ஆராய்ந்து வருகிறது.
முன்னதாக, நிலவிற்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரையிறங்குவதற்கு முந்திய சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் முதன்முதலாக நிலவின் தென்பகுதியில் ஆய்வுசெய்யும் ரஷ்யாவின் கனவும் தவிடுபொடியானது.
இத்தகைய தவறு நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே விக்ரம் இறங்குகலம் நிலவில் தரையிறங்கத் தோதான இடத்தை ஆராய்ந்து வருகிறது.
சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி ‘எல்விஎம்-3’ இலகுரக உந்துகணை மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் அவ்விண்கலம் நுழைந்தது.
முன்னதாக, இம்மாதம் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு விக்ரம் இறங்குகலம் நிலவில் தரையிறங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அது 19 நிமிடங்கள் தாமதமாக, அதாவது மாலை 6.04 மணிக்குத் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்தது.