சாலையில் கார்கள் மோதவில்லை;காரிகைகள் மோதிக்கொண்டனர்

சாலையில் கார்கள் மோதவில்லை;காரிகைகள் மோதிக்கொண்டனர்

1 mins read
edb73442-470f-4c27-b2c4-41d54dfc4d8d
ஒரு பெண் ஓட்டிச்சென்ற கார், மற்றொரு பெண் ஓட்டி வந்த வேறு ஒரு காரை மோதுவது போல சென்றதை அடுத்து சாலையில் பெண்கள் மோதிக் கொண்டதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. - படம்: தமிழக ஊடகம்

சண்டிகர்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் நகரில் சாலையில் பெண்கள் சரமாரியாக தாக்கிக்கொண்டதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.

அதனையடுத்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த நகரில் உள்ள செக்டார்-34 பகுதியில் ஒரு பெண் ஓட்டிச்சென்ற கார் மற்றொரு காரை மோதுவது போல சென்றதால் பிரச்சினை மூண்டதாகத் தெரிகிறது.

ஆவேசம் அடைந்த அந்த பெண் தனது காரை நிறுத்தி விபத்து ஏற்படுத்த முயன்ற காரில் இருந்த பெண்களுடன் வாக்குவாதம் செய்ததாகத் தெரியவந்தது.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு மூண்டது. ஒரு பெண்ணை மூன்று பெண்கள் சேர்ந்துகொண்டு தாக்கியதையும் பதிலுக்கு அந்த பெண், தன்னைத் தாக்கிய பெண்களுடன் தகராறு செய்ததையும் அந்தக் காணொளி காட்டியது.

பெண்கள் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் மாறி, மாறி கை, கால்களால் தாக்கிக் கொள்வது போலவும் காட்சிகள் உள்ளன.

காணொளி அதிக அளவில் பரபரப்பைக் கிளப்பியதை அடுத்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
மோதல்