ராஞ்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில நிதியமைச்சருமான ராமேஷ்வர் ஓரோனின் மகன் ரோஹித் ஓரான், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தொடர்புடைய ரோஹித் ஓரான் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட மதுபான வியாபாரிகளின் வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

