திருமலை: ஏழுமலையானை தரிசிக்க நடந்து வரும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு அடிவாரங்களில் உள்ள தேவஸ்தானத்தினரிடம் ஒப்படைத்தால் அவற்றை வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், ரூ.300 சிறப்பு தரிசன மையம் ஆகிய பகுதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) முதல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, உடைமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், செல்போன் எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

