ஸ்ரீநகர் ஏரியில் சோனியா படகுப் பயணம்

ஸ்ரீநகர் ஏரியில் சோனியா படகுப் பயணம்

1 mins read
4b52ac18-27a7-442d-988d-e5399e1da975
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஸ்ரீநகரில் உள்ள நைஜீன் ஏரியில் படகில் சென்று மகிழ்ந்தார். - படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீநகர்: இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சென்றுள்ளார்.

அவர், ஸ்ரீநகரில் உள்ள நைஜீன் ஏரியில் படகில் சென்று மகிழ்ந்தார். ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி சென்ற நிலையில், சனிக்கிழமை சோனியா காந்தி சென்றுள்ளார்.

“இது ஒரு குடும்ப சுற்றுப் பயணம். சோனியா குடும்பத்தினர் கட்சித் தலைவர்களைச் சந்திக்கமாட்டார்கள். கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள்,” என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி கடந்த 2ஆம் தேதி லடாக் சென்றிருந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ராகுல் காந்தியின் முதல் பயணம் அதுவாகும். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்