ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் மூவர் கைது; வெடிகுண்டுகள் மீட்பு

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் மூவர் கைது; வெடிகுண்டுகள் மீட்பு

1 mins read
2911d8e4-35c1-4621-a82d-39ea779319f9
-

ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் சனிக்கிழமை ராணுவத்துடன் காவல்துறை இணைந்து லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மூன்று பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 28 துப்பாக்கிகள், பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐந்து கையெறி குண்டுகள், மூன்று கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன.

குப்வாரா பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய காவல்துறை அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்