ஓர் ஆசிரியர் செய்யக்கூடாத இழிசெயல்: ராகுல் கண்டனம்

ஓர் ஆசிரியர் செய்யக்கூடாத இழிசெயல்: ராகுல் கண்டனம்

1 mins read
c7123668-05c9-4368-8779-b8dc738fdfd9
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவரை சமயரீதியாக விமர்சித்ததோடு இன்னொரு மாணவரை ஏவி விட்டுக் கன்னத்தில் அறையும்படி செய்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அப்பாவிக் குழந்தைகளின் மனத்தில் பிரிவினைவாதத்தை விதைப்பது, புனிதமான பள்ளிக்கூடத்தில் வெறுப்பை விற்பனை செய்யும் இடமாக மாற்றுவது என்பது ஓர் ஆசிரியர் செய்யக்கூடாத உச்சபட்ச இழிசெயலாகும்,” என்று தனது டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “பாஜக ஊற்றிய அதே மண்ணெண்ணெய்தான். இதைக்கொண்டுதான் நாட்டின் மூலை முடுக்குகளில் பாஜக வெறுப்பைப் பரப்பியுள்ளது.

“இந்தியாவின் எதிர்காலமே குழந்தைகள்தான். அவர்களிடம் வெறுப்பை விதைக்காமல், அன்பைப் போதிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சர்ச்சைக்குரிய காணொளி

பள்ளியில் 2ஆம் வகுப்புச் சிறுவனை மதரீதியில் திட்டுவதும் அவனை சக மாணவனைத் தூண்டிவிட்டு அடிக்கும்படி கூறியதுமான காணொளிக் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்