பாஜக எம்.பி. வீட்டில் 10 வயது சிறுவன் மர்ம மரணம்

பாஜக எம்.பி. வீட்டில் 10 வயது சிறுவன் மர்ம மரணம்

1 mins read
f428b7b4-7e1b-438d-8f75-7c770ea918aa
சிறுவனின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

கவுகாத்தி: அசாமின் சில்சார் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறப்பினரான ராஜ்தீப் ராய் என்பவரின் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வேலை செய்து வருகிறார்.

இதற்காக ராஜ்தீப் ராய் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ராஜ்தீப் ராய் வீட்டில் அந்த பெண்ணின் 10 வயது மகன் தூக்கில் பிணமாக தொங்கினான். இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சிறுவன் காணொளி விளையாட்டில் ஈடுபட அவனது தாய் கைப்பேசியைக் கொடுக்காததால் அந்தப் பையன் உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்