இந்தியாவின் ஆற்றலை உலகம் செப்டம்பர் மாதம் காணப் போகிறது; பிரதமர் மோடி

இந்தியாவின் ஆற்றலை உலகம் செப்டம்பர் மாதம் காணப் போகிறது; பிரதமர் மோடி

1 mins read
e6435ce6-09dd-497d-be1f-31e77035f858
இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள். நாடு வளர்ச்சி அடைவதை இனி யாராலும் தடுக்க முடியாது என்றார் பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் ஆற்றல் என்ன என்பதை உலகம் வரும் செப்டம்பர் மாதம் காணப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அதையொட்டி திரு மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) வானொலியில் உரையாற்றினார்.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி மிகப் பிரம்மாண்டமானது.

இது புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் சந்திராயன்-3 திட்டம் பெண் சக்திக்கு நேரடி எடுத்துக்காட்டு.

இந்தப் பணியில், பல பெண் அறிவியல் அறிஞர்கள், பொறியியலாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்குக் கூட சவால் விடுகிறார்கள். நாடு வளர்ச்சி அடைவதை இனி யாராலும் தடுக்க முடியுாது.

இந்தியாவின் ஆற்றலை உலகம் செப்டம்பர் மாதம் காணப்போகிறது. ஜி-20 தலைவர்களின் உச்சநிலை மாநாட்டை நடத்த இந்தியா முழுமையாக தயாராக உள்ளது.

அந்த மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள் பல உலக அமைப்புகளின் தலைவர்கள் டெல்லி வர இருக்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்