பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவை பாஜகவைச் சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்எல்ஏ கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார்.
இதனால் அவர் காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பாஜகவில் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்திய எல்லாப்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சிவராம் ஹெப்பார் முதல்வரை பெங்களூருவில் சந்தித்து பேசியுள்ளார்.
அவர் தனது தொகுதி பிரச்சினைகள் சம்பந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார்.
அவரும் காங்கிரசில் இணைவார் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் எஸ்.டி.சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரைவில் காங்கிரசில் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து முதல்வரைச் சந்தித்து வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களை பாஜகவிலேயே தக்க வைத்துக்கொள்ள அக்கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த எம்எல்ஏக்கள் இருவரும் காங்கிரசில் இணைய முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

