மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் தீ; 5 பேர் உயிரிழப்பு

1 mins read
8935f852-d4b6-465c-bf2a-3a5642180d36
மேற்கு வங்காள மாநிலத்தின் ஜகநாத்பூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ பற்றியது. தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். - படம்: ஊடகம்

கோல்கத்தா: ஜகநாத்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதனால் தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

ஏராளமானோர் மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் கருகிய நிலையில் ஐந்து பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்தது.

விபத்து நடந்தபோது ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்