மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம்

1 mins read
8424951d-cbfe-4fa9-9aa8-8aec1c5d3223
புதிய அமைச்சராகப் பதவியேற்ற ராஜேந்திர சுக்லா, கவுரிசங்கர் பிசேன், ராகுல் லோதி. - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 2

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங், நான்காவது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் முதல்வர் சவுகான் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார்.

இந்த விரிவாக்கத்தில் ராஜேந்திர சுக்லா, கவுரிசங்கர் பிசேன், ராகுல் லோதி ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் சவுகான். கடந்த சனிக்கிழமை அவர்கள் மூவரும் ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில், விந்த் வட்டாரத்தின் ரேவா தொகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சுக்லா. இவர் ரேவா தொகுதியில் நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர். இதற்கு முன் இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

மகாகோஷல் வட்டாரத்தின் பாலகார் தொகுதியைச் சேர்ந்தவர் *கெரி சங்கர் பிசேன். இவர் ராஜ்புட் சமூகத் தலைவர்களில் ஒருவர். ராகுல் லோதி என்பவர் காரக்பூரைச் சேர்ந்தவர். இவர் ஓபிசி தலைவர் ஆவார். 2021 மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விரிவாக்கத்துக்கு முன்பு அமைச்சரவையில் முதல்வர் சவுகான் உட்பட 31 பேர் இடம்பெற்றிருந்தனர். அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி இம்மாநில அமைச்சரவையில் 35 பேர் வரை இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்