ஜி 20 மாநாடு நடைபெறும் போது ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்

ஜி 20 மாநாடு நடைபெறும் போது ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்

1 mins read
f849e103-35e1-4b94-ab80-7a55e52ba3e5
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், நார்வேக்குச் செல்கிறார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது.

வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், நார்வேக்குச் செல்கிறார்.

செப்டம்பர் 7ஆம் தேதி அவர் பாரீஸ் செல்கிறார். அங்கிருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் சென்று ஐரோப்பிய எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி உரையாடுகிறார்.

செப்டம்பர் 8ஆம் தேதி அவர் பாரீஸ் நகரில் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார். 9ஆம் தேதி பாரீசில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 10ஆம் தேதி ராகுல்காந்தி நார்வே செல்கிறார். அங்கு இந்திய வம்சாவளியினரைச் சந்திக்கிறார். அதோடு நிருபர்களையும் சந்திக்கிறார்.

குறிப்புச் சொற்கள்