புதுடெல்லி: குவைத்தில் இருந்து வெள்ளி முலாம் பூசி கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை டெல்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த மூன்று பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர்களிடம் 4001 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி சுங்கத்துறை சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டது.
இந்த சம்பவத்தில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரபு நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுங்கத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், விதவிதமாக தங்கக் கடத்தல் நடந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, தங்க நகைகளை, வெள்ளி முலாம் பூசி கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

