புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ரக்ஷாபந்தன் என்னும் வடஇந்தியப் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கு வருகை மேற்கொண்டு பள்ளிச் சிறாருடன் கலந்துரையாடி வாழ்த்துத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நாட்டு மக்களுக்கு தன் ரக்ஷாபந்தன் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார்.
நமது இனிய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான வலுவான, புனிதமான உறவையும், குடும்ப உறுப்பினர்களின் பிணைப்பையும் பறைசாற்றுவதாக இந்தப் பண்டிகை அமைகிறது.
இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் அன்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் ஆழமாக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ‘என் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்” என்று டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.