மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

1 mins read
595534da-cbb7-4829-88e8-03b39cc2220b
படம்: - தமிழ்முரசு

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறினர். அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு படிப்படியாக அமைதி திரும்பிவருகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுராசந்த்பூர், பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்