நிறுவன மேலாளர் சுட்டுக்கொலை

நிறுவன மேலாளர் சுட்டுக்கொலை

1 mins read
264ea353-d2d7-4e34-8d2a-b0f9ce849b08
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் வர்த்தக நிறுவனமான அமேசானில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

அவர் தமது உறவினருடன் செவ்வாய்க்கிழமை இரவு சுபாஷ் விஹார் பகுதியில் சென்றபோது அவர்களை பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹர்பிரீத் கில் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற 5 பேர் கொண்ட கும்பல் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்