நச்சுவாயு கசிவு: ஐவர் மரணம்

நச்சுவாயு கசிவு: ஐவர் மரணம்

தமிழ்முரசு

30 Aug 2023 - 9:03 pm

1 mins read

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் தனிலா பகுதியில் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.

அந்த தொழிற்சாலையில் புதன்கிழமை காலை 11 மணியளவில் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, தொழிற்சாலையில் திடீரென நச்சுவாயு கசிவு ஏற்பட்டது. அதை சுவாசித்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயக்கமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்