ஹாக்கி: இந்திய அணி அபார வெற்றி

1 mins read
fa3f5b06-3516-4039-b006-c0e5abe41a5f
இந்திய அணி 15-1 என்ற கோல் கணக்கில் பங்ளாதேஷ் அணியை வென்றது.  - படம்: இந்திய ஊடகம்

சலாலா: அனைத்துலக ஹாக்கி கூட்டமைப்பின் சார்பில் குழுவுக்கு ஐவர் கொண்ட ஹாக்கி உலகக் கிண்ணத் தொடர் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ஓமானில் நடைபெறுகிறது.

இந் நிலையில் இந்தத் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது ஓமானில் உள்ள சலாலாவில் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆடவர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, பங்ளாதேஷுடன் மோதியது. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 15-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மனீந்தர் சிங் 4 கோல்களும், முகமது ரஹீல் 3 கோல்களும் அடித்தனர். சுக்வீந்தர் சிங், குர்ஜோத் சிங், பவன் ராஜ்பர் ஆகியோர் தலா 2 கோல்களும் மன்தீப் மோர், திப்சன் திர்கே ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்