தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரோ: நிலவில் ஆக்சிஜன் இருக்கிறது

1 mins read
5114b393-4879-422c-8d12-782e04d86900
நிலவின் தென்துருவத்தில் அரிய கனிமங்களும் ஆக்சிஜனும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. - படம்: ஐஏஎன்ஸ்

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்துவரும் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் இருந்து ரோவர், தென்துருவத்தில் அரிய கனிமங்களும் ஆக்சிஜனும் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு ஹைட்ரஜன் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது கூறியது.

இது தொடர்பாக இஸ்ரோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பிக் கருவி, நிலவின் தென்துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது.

அதேபோல், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மக்னிசீயம், சிலிகான் ஆகிய தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்