புதுடெல்லி: கனரா வங்கி தொடுத்த ரூ.538 கோடி கடன் மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத் துறையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ.848.86 கோடி கடனில் ரூ.538.62 கோடி திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக கனரா வங்கி புகார் அளித்தது.
அந்தப் புகாரின் பேரில், சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.
அதன் பின்னர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கு தொடர்பாக மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலிடம் அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினா்.
அதைத் தொடா்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.