பாபட்லா: ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில், குண்டூர் - கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். அவர்களில் நால்வர் பெண்கள்.
சந்தமாகுலூரு எனும் இடத்தில் ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது எதிரே படுவேகமாக வந்த லாரி வேகமாக மோதியது.
ஆட்டோவில் பயணம் செய்த இரு பெண்களும் ஓர் ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இரு பெண்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லாரி ஓட்டுநரின் அதிவேகமே கோர விபத்துக்கு காரணம் என கூறிய பாபட்லா காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நிகழ்ந்ததுமே லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடுகின்றனர்.
விபத்தில் சிக்கிய ஆட்டோ வாகனத்தில் ஏழு பேர் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியவர்கள் என்றும் செய்தியாளர்களிடம் காவல்துறை கூறியது.

