உத்தரப் பிரதேசத்தில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; இருவர் மரணம்

உத்தரப் பிரதேசத்தில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; இருவர் மரணம்

படம்: இந்திய ஊடகம்

04 Sep 2023 - 8:27 pm

1 mins read

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

பாராபங்கி மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்தது. கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியதால் அக்கம்பக்கம் வசிக்கும் பொதுமக்களின் உதவியோடு மாநில பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.

அதிகாலை 3 மணியளவில் கட்டடம் திடீரென்ற இடிந்து விழுந்ததாகவும் 12 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் பாராபங்கி மாவட்ட காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் சிங் கூறினார்.

இடிபாடுகளுக்குள் இன்னும் 4 பேர் சிக்கியிருக்க கூடும் என்றும் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து