சென்னையில் அறிமுகமாகும் ‘லைட் மெட்ரோ’

சென்னையில் அறிமுகமாகும் ‘லைட் மெட்ரோ’

1 mins read
74361c5c-a87c-4f60-86e2-6bc97d1c752f
பழங்கால ‘டிராம்’ வண்டிகளின் நவீன வடிவம்போல் ‘லைட் மெட்ரோ’ வண்டிகள் அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. - படம்: தினத்தந்தி

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் ‘லைட் மெட்ரோ’ எனப்படும் போக்குவரத்துக் கட்டமைப்பை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா நகர், தி.நகர் போன்ற, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ‘லைட் மெட்ரோ’வை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்பில் ஏறக்குறைய 2.50 லட்சம் பொதுமக்களிடம் நேரடியாகக் கருத்து திரட்டப்படும் என்று கூறப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் கருத்துத் திரட்டை மேற்கொள்ளும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயக்கப்பட்ட ‘டிராம்’ வண்டிகளின் நவீன வடிவமாக ‘லைட் மெட்ரோ’ அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

சுரங்கம் மற்றும் உயர்மட்டப் பாதை அமைக்காமல், சாதாரணமாக சாலையிலேயே செல்லும் வகையில் அது அமைக்கப்படும். சாலையின் ஓரத்தில் அல்லது மையப்பகுதியில் தண்டவாளம் அமைத்து, மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் ‘லைட் மெட்ரோ’ அமையும்.

ஒப்புநோக்க, மெட்ரோ திட்டங்களைவிட இதற்கான மூலதனச் செலவு குறைவாகும். ‘லைட் மெட்ரோ’ திட்டம் தொடர்பாக, பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு, வாகன நிறுத்த வசதிகள், நடைபாதை வசதி எனப் பத்துக்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்