காசியாபாத்: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த கவிநகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மோசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சரக்குக் கிடங்கில் ஏற்பட்ட தீ, பரவி தொழிற்சாலையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காசியாபாத் கோட்வாலி தீயணைப்பு நிலையம், தீவிபத்து குறித்த தகவல் அதிகாலை 6.18 மணிக்குக் கிடைத்ததாகக் கூறியது.
கவிநகரில் ஏராளமான தொழிற்கூடங்கள் உள்ளன.
நல்லவேளையாக தீ மற்ற தொழிற்கூடங்களுக்குப் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்து அதிகாலையில் ஏற்பட்டதால் தொழிலாளர்கள் யாரும் விபத்தில் சிக்கவில்லை.
இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
ஆனால், சரக்குக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்திற்கான காரணம் குறித்து அறிய காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்தச் தீச்சம்பவத்தால் காசியாபாத் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.