தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

1 mins read
c7959c66-ee1d-4ebb-8419-7f7bd9444f4d
மணிப்பூரில் ஊர்வலமாகச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் காயம் அடைந்தனர். - படம்: இந்திய ஊடகம்

இம்பால்: மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி மெய்தி சமூகம் -குகி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது.

இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.

இதன்பின்னர், ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐந்து மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு செவ்வாய்க்கிழமை மாலை தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், பிஷ்ணூபூர் என்ற மாவட்டத்தில் பவுகக்சாவோ பகுதியை நோக்கி புதன்கிழமை நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியபடி சென்றனர்.

அவர்கள் தோர்பங் பகுதியில் உள்ள தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முயன்று ராணுவத்தின் தடுப்பு சாதனங்களை உடைத்து, முன்னேறி செல்ல முற்பட்டனர்.

இதனால், அவர்களைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கி சூடும் நடத்தியது.

இதில் பலர் காயமடைந்தனர்.

இதன்பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் கலவரம் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல கட்டடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன.

அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் முயன்றாலும் அவ்வப்போது சில பிரச்சிணைகள் பெரும் கலவரமாக மாறி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவருகிறது.

குறிப்புச் சொற்கள்