தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காங்கிரஸ் பிரமுகரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த தாய், சகோதரர்

1 mins read
0c889a78-712a-4f38-9f7b-3fa2a6942f4c
உயிரிழந்த மாரிசெல்வம். - படம்: இந்திய ஊடகம்

காங்கிரஸ் கட்சியின் கருங்குளம் வட்டார செயலாளரான 30 வயது மாரி செல்வம் தாய், சகோதரரால் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி மாரிசெல்வத்திற்கும் அவரது தம்பி மணிகண்டனுக்கும் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மணிகண்டனுக்கு உதவியாக தாயார் லெட்சுமியும் இருந்துள்ளார். இதில் லெட்சுமியும் மணிகண்டனும் உருட்டுகட்டையால் மாரி செல்வத்தினை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த மாரி செல்வத்தினை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரிசெல்வம் புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, மணிகண்டன் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்