இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
தனியார் தொழில் முனைவோர்களுடன் இணைந்து கட்டப்பட்டுள்ள ‘கண்டீலீவர்’ என்றழைக்கப்படும் இந்தப் பாலம் 40 மீட்டர் நீளமுடையது. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு கண்ணாடிகளால் ஆனது. இந்தக் கண்ணாடிகள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
35 டன் இரும்பு, கண்ணாடிகளைக் கொண்டு 3 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் இந்தக் கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் முப்பது பேர் நடக்கலாம். ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிடலாம்.
இப்பகுதியில் பல்வேறு சாகச விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. ஸ்கை விங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கை ரோலர், ராக்கர் எஜெக்டர், ஃப்ரீ பால், ஜியாண்ட் ஸ்விங், ஜிப் லைன் முதலிய விளையாட்டு வசதிகளும் இங்கு உள்ளன.
கோலாஹலமேடு பகுதியில் உள்ள இந்க் கண்ணாடி பாலம் வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். மிக தூரத்தில் உள்ள முண்டக்காகயம், குட்டிக்கல், கோக்காயார் ஆகிய தொலைத் தூர பகுதிகளைக் கூட இந்த கண்ணாடிப் பாலத்திலிருந்து ரசிக்கலாம்.
கண்ணாடி மேல் நடப்பதும் கண்ணாடியின் முனைக்கு சென்று 3500 அடி ஆழ பள்ளத்தை பார்ப்பதும் திகிலூட்டும் சம்பவவமாக இருக்கும். ஸ்டீல், ஜெர்மனி கண்ணாடி கொண்டு பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.